மாட்டு வண்டி எல்கை பந்தயம்
திருப்புனவாசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், திருப்புனவாசல் அருகே காடாத்திவயல் கிராமத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து 61 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.
பரிசு
பந்தயத்தில் மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது. தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகையும், கேடயமும் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு பந்தயத்தை ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை காடாத்திவயல் கிராமமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் திருப்புனவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.