மீண்டும் மாட்டுச்சந்தை உருவாக்கப்படுமா?


மீண்டும் மாட்டுச்சந்தை உருவாக்கப்படுமா?
x

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மாட்டுச்சந்தை உருவாக்கப் படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மாட்டுச்சந்தை உருவாக்கப் படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மாட்டுச்சந்தை

திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் மாட்டுச்சந்தை செயல்பட்டுவந்தது. இதனையொட்டி திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 38 கிராமங்களை சேர்்ந்த விவசாயிகள் மட்டுமல்லாது மதுரையை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தங்களது மாடுகளை விற்கவும், வாங்கவும் சந்தைக்கு வந்து சென்று வந்தனர்.

இதனால் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று சந்தை களை கட்டியது. இந்த சந்தை மூலம் இடைத்தரர்கள் இல்லாமலே நியாயமான விலைக்கு மாடுகளை விற்று வந்தனர். மாட்டு சந்தையால் வாரம்தோறும் பேரூராட்சிக்கு கனிசமான வருமானம் கிடைத்து வந்தது

நாட்டு மாடுகள்

இதே சமயம் கிராமபுறங்களில் நாட்டு மாடுகள் வளர்ப்பும் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று மாட்டு சந்தை நிறுத்தப் பட்டுவிட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி விவசாயிகள் வாடிப்பட்டியில் நடைபெறும் சந்தைக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டது. அதனால் நீண்ட பயணம், மாடு களை ஏற்றி இறக்கக்கூடிய வாகன செலவு, வாகனத்தில் மாடுகளை கொண்டு வருவதில் பாதுகாப்பு உறுதி இல்லாமை இருப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எதிர்பார்ப்பு

இதனால் சமீபகாலமாக நாட்டு மாடுகள் வளர்ப்பு கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாளடைவில் திருப்பரங்குன்றம் பகுதியில் நாட்டு மாடுகளை காண்பது அரிதாகிவிடும். எனவே மீண்டும் மாட்டு சந்தையை நடத்த வேண்டும். அதற்காக மதுரை மாநகராட்சி நிர்வாகம் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகத்துடன் ஒப்புதல் பெற்று மலைக்கு பின்புறம் உள்ள இடத்தில் மாட்டு சந்தையை உருவாக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story