காளை விடும் திருவிழா


காளை விடும் திருவிழா
x

குடியாத்தம் அருகே நடந்த காளைவிடும் திருவிழாவில் 200 காளைகள் பங்கேற்றன.

வேலூர்

காளைவிடும் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தில் 108-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன.

காளைகள் ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கால்நடை மருத்துவர்கள், காளைகளை பரிசோதனை செய்தனர். திருவிழாக்குழு தலைவர் சிவபிரசாத், செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் வரவேற்றார். குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

சீறிப்பாய்ந்து ஓடின

அதைத்தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப் பாய்ந்து சென்றன. அப்போது காளைகள் முட்டி சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் வி.மத்தூர் கிராம பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர். விழாவில் மாவட்ட கவுன்சிலர் குசலகுமாரி சேகர், ஊராட்சி மன்ற தலைவர் கவுசல்யா உமா காந்தன், ஒன்றியக் குழு உறுப்பினர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story