காளை விடும் திருவிழா


காளை விடும் திருவிழா
x

கண்ணமங்கலம் அருகே காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே படவேடு காலனியில் காளை விடும் திருவிழா நடைபெற்றது.

காலை 7 மணிஅளவில் காளை விடும் திருவிழாவை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் ஆர்.வி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு வேகமாக ஓடின. வேகமாக ஓடி முதலிடம் பெற்ற காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

அத்துடன் 40-க்கும் மேற்பட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

---


Next Story