குமரியில் மழை நீடிப்பு:புத்தன் அணையில் 21.6 மில்லி மீட்டர் பதிவு


குமரியில் மழை நீடிப்பு:புத்தன் அணையில் 21.6 மில்லி மீட்டர் பதிவு
x

குமரியில் மழை நீடிப்பால் புத்தன் அணையில் 21.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் மழை நீடிப்பால் புத்தன் அணையில் 21.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை நீடித்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புத்தன் அணை பகுதியில் 21.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 1, பெருஞ்சாணி அணை- 2, சிற்றார் 1- 3.6, சிற்றார் 2- 2.4, மாம்பழத்துறையாறு- 1, கொட்டாரம்- 4.2, குழித்துறை- 9.2, நாகர்கோவில் -1, கோழிப்போர்விளை- 2.4, அடையாமடை- 9, முள்ளங்கினாவிளை- 8.2, களியல்- 6.2, பூதப்பாண்டி- 1.4, திற்பரப்பு- 6.6, ஆனைக்கிடங்கு-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.56 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.10 அடியாகவும், சிற்றார் 1-12.33 அடியாகவும், சிற்றார் 2-12.43 அடியாகவும் உள்ளன. இந்த 4 அணைகளின் தண்ணீர் செல்லும் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 699 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 455 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 132 கன அடி தண்ணீரும் வந்தது. இதேபோல் அணையில் இருந்து தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.


Next Story