பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் லோகநாதன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 15 சதவீத ஓய்வூதிய உயர்வு 2017-ம் ஆண்டு முதல் உடனே வழங்க வேண்டும். முடக்கப்பட்ட ஐ.டி.ஏ.வை உடனே வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story