திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூலி தொழிலாளி
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஷில்பா (வயது 23). இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி திருமணம் நடநதது. பின்னர் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ஷில்பா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ஷில்பாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.