லஞ்சப்புகார்: பெண் சார்பதிவாளருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை -சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
லஞ்சப்புகார்: பெண் சார்பதிவாளருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு.
சென்னை,
சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் அகமது சபிர். விமானி. கடந்த 2015-ம் ஆண்டு இவர், திருமண சான்றிதழ் கோரி திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது பணியில் இருந்த சார்பதிவாளர் வைதேகி, திருமண சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அகமது சபிர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, அகமது சபிர் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, அதை பெற்றுக்கொண்ட சார்பதிவாளர் வைதேகியை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி மணிமேகலை முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வைதேகி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.