சோழத்தரத்தில்கோவில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச்சென்ற மர்மநபர்கள்போலீசார் விசாரணை
சோழத்தரத்தில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை மர்ம நபர்கள் தூக்கி சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோழத்தரம்,
சோழத்தரத்தில் காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 57) என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை விஸ்வநாதன், வழக்கம் போல் கோவிலை திறக்க சென்றார்.
அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த உண்டியலை காணவில்லை.
போலீஸ் விசாரணை
உடனே அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், காணிக்கை பணத்துடன் இருந்த உண்டியலை உடைத்து தூக்கிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன உண்டியலில் ரூ.5 ஆயிரம் இருந்திருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.