காலை உணவுத் திட்டம்: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்.!


காலை உணவுத் திட்டம்: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்.!
x
தினத்தந்தி 25 Aug 2023 4:03 AM GMT (Updated: 25 Aug 2023 5:10 AM GMT)

மாணவர்- மாணவிகளுக்கு உணவை பரிமாறிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

தூத்துக்குடி :

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது.

மாணவர்- மாணவிகளுக்கு உணவை பரிமாறிய மக்களை உறுப்பினர் கனிமொழி, தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இந்த பள்ளியில் மொத்தம் 125 மாணவர்- மாணவியர் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ - மாணவியர் பயனடைவர்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா சார் ஆட்சியர் கவுரவ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீர புத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story