ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூஜை அறையில் வைத்து வழிபாடு


ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூஜை அறையில் வைத்து வழிபாடு
x

குடியாத்தத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூஜை அறையில் வைத்து வழிபாடு

வேலூர்

குடியாத்தம், கொண்ட சமுத்திரம், மப்பண்ண முருகப்ப முதலி தெருவில் வசிப்பவர் ஸ்ரீதர். இவருடைய வீட்டில் பிரம்ம கமலம் என்ற பூ செடி வளர்க்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்து நட்டு வைத்த இந்த செடி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒரே ஒரு பூ மட்டும் பூத்தது. இந்த ஆண்டு் ஒரே நேரத்தில் 4 பூக்கள் பூத்துக்குலுங்கின. செடியின் மேல் பகுதியில் மூன்று பூக்களும், அடிப்பகுதியில் ஒரு பூவும் என மொத்தம் 4 பூக்கள் ஒரே நேரத்தில் பூத்துக் குலுங்கின.

இதனை பூஜை அறையிள் வைதக்து வழிபட்டனர். பூஜை அறை முழுதும் பூவின் ஒருவிதமான மணம் வீசியது. இரவு 10 முதல் 2 மணிக்குள்ளாக இந்த பூக்கள் பூத்ததாகவும், பூத்த பிறகு அரை மணி நேரம் மட்டுமே விரிந்து இருக்கிறது. அதன் பிறகு வாடிவிடுகிறது. இதனால் பகல் நேரத்தில் பூத்த நிலையில் காண முடிவதில்லை. என்று வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.


Next Story