மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானார். அண்ணன்-தங்ைக இருவரும் படுகாயமடைந்தனர்.
துக்க நிகழ்ச்சிக்கு...
புதுக்கோட்டை அருகே வயலோகத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பாலசுப்பிரமணியன் (வயது 13). இவர்கள் குடும்பத்தோடு ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இவரது உறவினர் கல்லாலங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.
இவரது மகள் ஜான்சி (21), மகன் லெனின் (24). இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு பாலசுப்பிரமணியன் குளிக்க வந்தார். அப்போது பாலசுப்பிரமணியன் அங்கு சென்ற மின்கம்பியை தொட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைபார்த்த ஜான்சி, லெனின் ஆகிய 2 பேரும் அவரை காப்பாற்றுவதற்கு அவரை தொட்டுள்ளனர். இதில் 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து படுகாய மடைந்து தூக்கி வீசப்பட்டனர்.
சிறுவன் பலி
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலசுப்பிரமணியனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஜான்சி, லெனின் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.