மின்கம்பத்தில் கார் மோதி உருண்டதில் சிறுவன் பலி


மின்கம்பத்தில் கார் மோதி உருண்டதில் சிறுவன் பலி
x

ிருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிபோது மின்கம்பத்தில் கார் மோதி உருண்டதில் சிறுவன் பலியானான். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிபோது மின்கம்பத்தில் கார் மோதி உருண்டதில் சிறுவன் பலியானான். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு...

புதுச்சேரி மாநிலம் கோரிமேடு கருணை ஜோதி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 37). இவருடைய மகன் அரிகேஷ் (4). ராஜ்குமார் தனது மகனுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கை செலுத்த முடிவு செய்தார்.

இதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு காரில் வந்தார். இங்கு அவர்கள் சிறுவன் அரிகேசுக்கு முடி காணிக்கை செலுத்தினர்.

கார் உருண்டது

அதன்பிறகு அவர்கள் நேற்று காரில் புறப்பட்டு கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ராஜ்குமாரின் தம்பி பாரதிகுமார் (36) ஓட்டினார்.

உவரியை அடுத்த வல்லான்விளை தென்கரை மகராஜா கோவில் அருகே சென்றபோது, கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. அதன்பிறகும் நிற்காமல் ஓடி அங்குள்ள தென்னை மரத்தில் மோதி உருண்டு கவிழ்ந்தது.

சிறுவன் சாவு

இதில் சிறுவன் அரிகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மேலும் காரில் இருந்த ராஜ்குமார், அவருடைய தாயார் தமிழரசி (55), மனைவி திவ்யா (35), பாரதிகுமார், அவரது மனைவி கீர்த்தி (24), சுப்பராயன் மனைவி ஞானம்பால் (78) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். ராஜ்குமார் மகன் அகிலேஷ் (14), பாரதிகுமார் மகள் நிதிக்ஷா (1) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு, ராதாபுரம், நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியான சிறுவன் அரிகேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சோகம்

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் முடிகாணிக்கை செலுத்திவிட்டு திரும்பியபோது கார் உருண்டதில் சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது விபத்து நடந்த வல்லான்விளை தென்கரை மகராஜா கோவில் அருகே அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story