சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே வடவாளம் தெற்கு செட்டியாபட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் முருகேசன் (வயது 24). இவர், 15 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அந்த சிறுமியை அவரது தாயார் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story