தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தங்க மோதிரம்
முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி 100-வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
இதேபோன்று, கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசுப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், நகர சபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு 14 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சவுந்திரவள்ளி அம்மன் கோவில் வாஸ்து பூஜை
மேலும், எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் உள்ள சுவுந்திரவள்ளி அம்மன் கோவிலில் புதிய கட்டடம் கட்டுவதற்காக வாஸ்து பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு இளம்புவனம் ஊராட்சி மன்ற தலைவர் முத்து குமார் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். கோவில் வாஸ்து பூஜையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கிளைச் செயலாளர் வைரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் புதிய மண்டபம் கட்டுவதற்கான பணியை எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டில் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரிலோவன்பட்டி நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.