புத்தக கண்காட்சி
செங்கோட்டையில் புத்தக கண்காட்சி நடந்தது
செங்கோட்டை:
செங்கோட்டை வாகைமரத்திடல் காந்தி சிலை முன்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில், செங்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு மற்றும் புத்தக கண்காட்சி-முகாம் நடந்தது.
செங்கோட்டை நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவா் கணேசன், நகர்மன்ற உறுப்பினா் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா். செங்கோட்டை ஒன்றிய களப்பணியாளா் முத்துலட்சுமி வரவேற்று பேசினார்.
அதனைதொடா்ந்து விழிப்புணா்வு கண்காட்சி முகாமை நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னா் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் இசக்கிமுத்து, மாற்றுதிறனாளிகளுக்கு அரசு அளிக்கும் நலத்திட்ட உதவிகள் பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள், அடையாள அட்டை பெறுவது எப்படி, சுயதொழில் உபகரணங்கள் பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
செங்கோட்டை ஒன்றிய களப்பணியாளா் இந்துமதி, மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முடிவில் அமர்சேவா சங்கத்தின் சிறப்பு பள்ளி ஆசிரியா் ஈஸ்வரி நன்றி கூறினார்..