பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பொக்லைன் உரிமையாளர் பலி
பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பொக்லைன் உரிமையாளர் பலியானார்
தென்காசி
சங்கரன்கோவில்:
ஊத்துமலை அருகே உள்ள பலபத்திரராமபுரத்தைச் சேர்ந்தவர் புதியகண்ணு மகன் முத்துசாமி (வயது 40). இவர் சொந்தமாக பொக்லைன் வைத்திருந்தார். நேற்று மாலை முத்துசாமி நெல்லை சாலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் முத்துசாமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சின்ன கோவிலாங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த முத்துசாமிக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story