குற்றாலத்தில் படகு சவாரி; இன்று தொடங்குகிறது


குற்றாலத்தில் படகு சவாரி; இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 5:24 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி இன்று தொடங்குகிறது.

தென்காசி

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி இன்று தொடங்குகிறது.

படகு சவாரி

குற்றாலத்தில் சீசன் தற்போது பிரமாதமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து சீசனை அனுபவிக்கிறார்கள். ஆண்டுதோறும் இந்த சீசனின் போது சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் இருக்கும் படகு குழாமில் படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம்.

தற்போது வெண்ணமடைகுளம் நிரம்பி இருப்பதால் படகு சவாரி இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை தொடங்கி வைக்கிறார்கள்.

கட்டண விவரம்

சுற்றுலா பயணிகளின் சவாரிக்காக 2 பேர் பெடல் படகுகள் 6, நான்கு பேர் பெடல் படகுகள் 16, 4 பேர் துடுப்பு படகுகள் 5, தனி நபர் படகு 4 ஆக மொத்தம் 31 படகுகள் தயார் நிலையில் உள்ளன. கட்டணமாக இருவர் செல்லும் பெடல் படகுகளுக்கு ரூ.150, நான்கு பேர் பெடல் படகுகளுக்கு ரூ.200, 4 பேர் துடுப்பு படகுகளுக்கு ரூ.250, தனிநபர் படகுக்கு ரூ.150 விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் 30 நிமிடங்களுக்கு மட்டுமே.

இந்த தகவலை படகு குழாம் மேலாளர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story