கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு:விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு:விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 21 May 2023 7:15 PM GMT (Updated: 21 May 2023 7:15 PM GMT)

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு ஏற்பட்டதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு ஏற்பட்டதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.

சுற்றுலா தலம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாளான நேற்று கடற்கரையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு தளத்திற்கு சென்றனர்.

அப்போது கன்னியாகுமரியில் கடலில் நீர்மட்டம் தாழ்வாகவும், சீற்றமாகவும் காணப்பட்டது.

2 மணி நேரம் தாமதம்

இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. எனவே படகு துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பிறகு காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story