அரங்குளநாதர் கோவிலில் தெப்ப திருவிழா


அரங்குளநாதர் கோவிலில் தெப்ப திருவிழா
x

அரங்குளநாதர் கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருவரங்குளம்:

திருவரங்குளத்தில் அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பதிருவிழா நடைபெற்றது. இதையடுத்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் பட்டாடை உடுத்தி தங்க வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் ெதப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் மேள தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தெப்பத்தில் 3 முறை சுற்றி வந்தனர். இதில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கிராமிய நிகழ்ச்சி மற்றும் கரகாட்டம் நடைபெற்றது.


Next Story