தென்காசி அருகே பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்


தென்காசி அருகே பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே சூரியகாந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

தென்காசி

குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் செல்கிறார்கள்.

இந்த நிலையில் தென்காசி அருகே உள்ள அகரக்கட்டு கிராமத்தில் சூரியகாந்தி பயிரிடப்பட்டு உள்ளது. வழக்கமாக இந்த பகுதியில் நெல், வாழை, தென்னை போன்றவை தான் பயிரிடப்படும். அதற்கு மாற்றாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கார்வின், சுமார் 2½ ஏக்கர் பரப்பில் சூரியகாந்தியை பயிரிட்டுள்ளார். தற்போது அவை நன்றாக வளர்ந்து, சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இதனால் அங்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அங்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி பூக்களை பார்த்து ரசிப்பதுடன் 'செல்பி' எடுத்தும் மகிழ்ச்சி அடைகின்றனர்.


Next Story