சேது என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம்
சேது என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் போலீஸ் சூப்பிரண்டு ெதாடங்கி வைத்தார்
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே ஆவியூரில் உள்ள சேது என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் மற்றும் போதை பொருட்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேது பொறியியல் கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் முகமது ஜலில் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனிமுகமது அலி மரக்காயர், நிலோபர் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் அனைவரும் போதை பொருட்களை ஒழிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பாதுகாப்பு குறைவு என நினைத்தால் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.