ரத்ததான முகாம்
அரக்கோணத்தில் ரத்ததான முகாம்
அரக்கோணம்
அரக்கோணம் ரோட்டரி சங்கம், அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ரத்ததான முகாமை கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தியது. ரோட்டரி சங்க தலைவர் கே.சுதீஷ், செயலாளர் ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர்.
கிருஷ்ணா கல்வி குழு செயலாளரும், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநருமான டி.எஸ்.ரவிகுமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஜி.ஆர்.டி.நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் பத்மாவதி, பேராசிரியை சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தனர்.
நாராயணி மருத்துவமனை டாக்டர் அரவிந்த், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டு 118 மாணவர்களிடம் இருந்து ரத்த தானம் பெற்றனர்.
முகாமில் ரோட்டரி சங்க ஆலோசகர்கள் ஜி.மணி, சந்துரு, விவேகானந்த கல்வி குழு செயலாளரும், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநருமான செந்தில்குமார், ரோட்டரி துணை ஆளுநா் குணசீலன், நிர்வாகிகள் கே.பிரபாகரன், ஆர்.வெங்கட்ராமன், மணிகண்டன், பி.ஆர்.முரளி, எல்.ஐ.சி. முத்துகுமரன், பி.ரவிகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் எம்.எஸ்.மான்மல் நன்றி கூறினார்.