நெல்லையில் சாலைகள் துண்டிப்பு - 20 கிராம மக்கள் தவிப்பு


நெல்லையில் சாலைகள் துண்டிப்பு - 20 கிராம மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2023 4:55 PM IST (Updated: 18 Dec 2023 5:38 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, ஏர்வாடி இடையேயான சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.

நெல்லை,

நெல்லை,தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது. வெள்ளத்தின் பாதிப்புகளை மக்கள் எக்ஸ் தளத்தில் பாதிப்புகளாக வெளியிட்டுள்ளனர்.

அதீத கனமழையால், குறிப்பாக நெல்லை மாநகரம் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, ஏர்வாடி இடையே வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தனித்தீவு போல காட்சி அளிப்பதால் சுமார் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


Next Story