விஜய் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணியா ? எல்.முருகன் விளக்கம்
இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என எல்.முருகன் தெரிவித்தார்
திருப்பூர் ,
திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய இணை மந்திரி எல். மந்திரி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,
தமிழகத்தில் மக்கள் கிராமங்கள் , நகரங்கள் என ஒவ்வொரு தெரு முனையிலும் விநாயகரை வழிபடுகின்றனர். தமிழகம் ஆன்மீக பூமி; இங்கு போலி திராவிடத்திற்கு இடமில்லை.என தெரிவித்தார். மேலும்,விஜய் தற்போது தான் கட்சி தொடங்கி உள்ளார். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் விஜய் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்குமா என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் . என தெரிவித்தார்
Related Tags :
Next Story