பா.ஜ.க. சார்பில் புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி
தென்காசியில் பா.ஜ.க. சார்பில் புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி
சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் டெல்லியில் அமைய உள்ள வீர பூமி நினைவிடத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து வீரமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் புனித மண் எடுத்து அதை கலசத்தில் அடைத்து பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராமநாதன், துணை தலைவர் முத்துக்குமார், மண்டல் பார்வையாளர் ஆனந்தி முருகன், நகர தலைவர் மந்திரமூர்த்தி, ஆன்மிகப்பிரிவு செயலாளர் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story