தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் தா.பழூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடகாவில் இருந்து காவிரி நதிநீர் பெற்றுத் தராத தமிழக அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்ட பொது செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், அய்யாரப்பன், மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் இளையராஜா, அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை பேசினர். மாநில விவசாய அணி துணை தலைவர் பண்ணை வயல் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். மாநில அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பா.ஜ.க. கிழக்கு வட்டார தலைவர் அரங்கநாதன் நன்றி கூறினார்.


Next Story