பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை கண்டித்து, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ரங்கசாமி, சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் தடா.பெரியசாமி மீது நடக்கும் தொடர் கொலை முயற்சிக்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை கண்டித்தும், கட்சி தலைவரான தொல்.திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய அணி மாவட்ட தலைவர் சக்திவேல், பட்டியல் அணி மாநில செயலாளர் சரவணன், மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story