பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் தற்போது இயங்கி வரும் நகரசபை பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் தினசரி சந்தை அதே இடத்தில் இயங்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட நிதியில் நகரில் போக்குவரத்து நெருக்கடி இல்லாத இடத்தில் கூடுதல் தினசரி சந்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பா.ஜனதா கட்சியினர் நேற்று பயணிகள் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், பால முருகேசன், பொதுச்செயலாளர் வேல் ராஜா விஜயகுமார், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமண குமார், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து, மகளிர் அணி மாவட்ட தலைவர் டாக்டர் கலையரசி, முன்னாள் ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன், சிந்தனையாளர் பிரிவு பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story