நெல்லையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
நெல்லையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை
நெல்லை வண்ணார்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மதத்தை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்தும், பா.ஜனதா மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் டி.வி.சுரேஷ், வேல் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட துணைத்தலைவர்கள் முருகதாஸ், சீதா குத்தாலிங்கம், செயலாளர் நாகராஜன், குட்டி என்ற வெங்கடாஜலபதி, மண்டல தலைவர்கள் மேகநாதன், பிரேம் குமார், இசக்கி, அய்யப்பன், குரு கண்ணன், மாரியப்பன், அங்குராஜ், பூபதிராஜா, பெரியதுரை, நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி
இதேபோன்று தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை தலைவர்கள் முத்துக்குமார், முத்துலட்சுமி, பால சீனிவாசன், பால்ராஜ், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ஊடகப்பிரிவு செந்தூர்பாண்டியன், சுரண்டை அய்யாசாமி, தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் யோகா சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பை- களக்காடு
அம்பை பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாவட்ட துணைத்தலைவர் ராம்ராஜ் பாண்டியன், ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் லட்சுமணராஜா, நகர தலைவர்கள் அம்பை நடராஜன், விக்கிரமசிங்கபுரம் தங்கேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் நாங்குநேரி தளவாய், கவிக்கண்ணன், களக்காடு ராமேஸ்வரன், நகர தலைவர் கணபதிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.