விபத்தில் பா.ஜ.க. பிரமுகர் சாவு
மானூரில் நடந்த விபத்தில் காயம் அடைந்த பா.ஜ.க. பிரமுகர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
திருநெல்வேலி
மானூர்:
மானூர் அருகே எட்டான்குளத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 30). மானூர் ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மானூர் நோக்கி வந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், அவரது மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் முத்துகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். மானூர் போலீசார் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முத்துக்கிருஷ்ணன் இறந்தார்.
Related Tags :
Next Story