ஆலங்குளத்தில் பா.ஜ.க. கூட்டம்


ஆலங்குளத்தில் பா.ஜ.க. கூட்டம்
x

ஆலங்குளத்தில் பா.ஜ.க. கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம், பிப்.28-

ஆலங்குளத்தில் பா.ஜ.க. விருதுநகர் மேற்கு மாவட்ட பிறமொழி பிரிவின் மாவட்ட செயலாளர் ஆலங்குளம் அய்யப்பன் கோவிந்தராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் குறித்தும், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் இந்த கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கனகராஜ், தென்காசி மாவட்ட பிறமொழி பிரிவு தலைவர் சங்கர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர்கள் சிவக்குமார், ரமணி, சாமி, சரவணன், சித்தார்த்த சங்கர், மகாலட்சுமி, கண்ணன், செந்தில்குமார், ஆதிலட்சுமி, சென்னை ராதாகிருஷ்ணன், கூரை தாழ்வார், சுண்டன் குளம் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலபதி, முன்னாள் கவுன்சிலர் ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட பிறமொழி பிரிவின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story