பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் பாரபட்சமாக உள்ளது
பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் பாரபட்சமாக உள்ளது
பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் பாரபட்சமாக உள்ளது என முத்தரசன் கூறினார்.
பேட்டி
கூத்தாநல்லூரில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் பாரபட்சமாக உள்ளது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒரு மாதிரியாகவும், பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வேறு விதமாகவும் உள்ளன. அரசியல் சட்டத்திற்கு எதிரான இதுபோன்ற அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளாமல், மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும் என்று பிரதமர் மோடி பேசுவது நகைப்புக்கு உரியதாக உள்ளது.
ஜனநாயகத்திற்கு எதிரானது
சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பா.ஜ.க. அரசின் உத்தரவை நிறைவேற்றும் அமைப்புகளாக மாறியிருப்பது ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது.
தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலையாளிகளின் பின்புலத்தை தீவிரமாக விசாரித்து அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12 மணி நேர வேலை பிரச்சினையில் சமூக முடிவு ஏற்பட்டு விட்டது. அதனால், வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா தன்மை அறிந்து பேச வேண்டும்.
இவ்வாறு கூறினார்.