பா.ஜ.க.வும், கங்கையும் ஒன்று- டிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம்
பா.ஜ.க.வும், கங்கையும் ஒன்று தான். கங்கையில் மூழ்கி எழுந்தால் புனிதர்கள் ஆகிவிடுவதுபோல பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டால் அவர்கள் புனிதர்களாகிவிடுகிறார்கள் என்று இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை,
செம்மண் குவாரி முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஆஜராகிய அமைச்சர் பொன்முடியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் குற்றவாளி ஆகிவிடமாட்டார். விடிய, விடிய அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடியை விசாரித்தது மனித உரிமை மீறல். பெங்களூரில் நடைப்பெறும் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவு மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை சோதனை நடைப்பெறுகிறது.
பா.ஜ.க.வும், கங்கையும் ஒன்று தான். கங்கையில் மூழ்கி எழுந்தால் புனிதர்கள் ஆகிவிடுவதுபோல பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டால் அவர்கள் புனிதர்களாகிவிடுகிறார்கள். கங்கையில் அழுக்கு உள்ளதுபோல பா.ஜ.க.விலும் அழுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.