காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜர் பிறந்த நாள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் நகர தலைவர் கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. முன்னதாக பஸ் நிலையம் முன்பு உள்ள கட்சி கொடி கொடியேற்றப்பட்டது. இதையடுத்து ஸ்தூபி மைதானத்தில் உள்ள நூற்றாண்டு நினைவு சின்னத்தில் காமராஜர் உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், நகர செயலாளர் ரகமத்துல்லா, நிர்வாகிகள் ராஜகோபால், செந்தில்குமார், பாலாஜிகுமார் சீதாராமன், கமால், கிருஷ்ணன், சுப்பிரமணி, விஜயரங்கன், காண்டீபன், காவேரி, மாதப்பன் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பையர்நத்தம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் அரசு பள்ளியில் காமராஜர், பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் பச்சியப்பன், பழனி, ஆகியோர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சு பேட்டி, கட்டுரைபோட்டி, ஓவிய போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் எழிலரசி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டுள்ளார்.
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாப்பாரப்பட்டி இந்திராகாந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவுக்கு நிர்வாகி சண்முகம் காவேரி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கஸ்தூரிமுத்து முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் சண்முகம் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காவேரி, நிர்வாகிகள் தங்கராஜ், மாதேஷ், மணி உளபட பலர் கலந்து கொண்டனர். மாதேஅள்ளி கிராமத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவை ஒட்டி கட்சி கொடியேற்றப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. முடிவில் வக்கீல் வேலு நன்றி கூறினார்.
நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர்கள் முத்துவேல், கணேசன், செயலாளர் ராசப்பன், பொருளாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் துரைசாமி கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் குமார், ஊராட்சி துணை தலைவர் விஜயராகவன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் உத்தமன் நன்றி கூறினார்.
அரூர்
அரூர் பஸ் நிலையம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் வட்டார தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சரவணன் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் வட்டார தலைவர் அரவிந்தன், நகர பொறுப்பாளர் ஆறுமுகம், வர்த்தக அணி மாவட்ட தலைவர் அருண், நகர தலைவர் சாமிகண்ணு, மாநில செயலாளர் கலைமணி, இளைஞரணி பொறுப்பாளர் ராஜீவ் காந்தி, வர்த்தக துணை தலைவர் சொக்கலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.