நஞ்சராயன் குளத்திற்கு முதன்முறையாக வருகை தந்த 2 வெளிநாட்டு பறவைகள்
நஞ்சராயன் குளத்திற்கு முதன்முறையாக வருகை தந்த 2 வெளிநாட்டு பறவைகள்
ஊத்துக்குளி, செப்.25-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் 450 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. சைபீரியா, வடக்கு ஐரோப்பிய ஆகிய நாடுகளில் காணப்படும் கடற்கரை பறவையான யுரேசியன் கர்வு மற்றும் யுரேசியன் ஹாபி ஆகிய 2 பறவைகள் திருப்பூர் மாவட்டத்திற்கு முதல் முறையாக நஞ்சராயன் குளத்திற்கு வந்துள்ளதாக திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் "இவை வடக்கு ஐரோப்பிய பகுதிகளில் கடற்கரை ஓரங்களில் காணப்படும் உள்நாட்டு நீர் நிலைகளில் காண்பது அரிது. குறிப்பாக யுரேசியன் ஹாபி ஐரோப்பிய நாடுகளிலும் மலைப்பிரதேசமான இமயமலை போன்ற இடங்களிலும் காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பணிகள் விரைந்து முடிவடைந்தால் மேலும் பல அரிய வகை பறவைகளை நஞ்சராயன் குளத்தில் காண முடியும்.நேற்று நஞ்சராயன் குளத்தில் மஞ்சள் குறுகு, நீலகண்ட சோலை பாடி, தட்டை வாயன், நீலச்சிறகி, மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கிடா போன்ற பறவைகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.நஞ்சராயன் குளத்திற்கு முதன்முறையாக வருகை தந்த 2 வெளிநாட்டு பறவைகள்