சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவிடும் பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும்


சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவிடும் பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவிடும் பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் நகராட்சி சார்பில் உலக பறவைகள் வலசை தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு ஏமப்பேர் ஏரியில் பறவைகள் வாழ்வதை டெலஸ்கோப் மூலம் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஈரப்பத நிலங்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் கோமுகி அணை, மணிமுக்தா அணை மற்றும் அதிக அளவில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் உள்ளன. இங்கு இமயமலை பகுதி, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுமார் 120 பறவை இனங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வாழ்விடத்திற்காகவும், இனபெருக்கத்திற்காகவும் வந்து செல்கின்றன. பறவைகள் என்பது சுற்றுப்புறத்தை பேணி காக்கும் ஓர் அற்புதமான உயிரினமாகும். நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பறவைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது அனைவரின் கடமையாகும். இதற்காக தான் உலகம் முழுவதும் உலக பறவைகள் வலசை தினம் கொண்டாடப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவிடும் பறவை இனங்களை பொதுமக்கள் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். மேலும் நீர் நிலைகளை மாசுப்படுத்தாமல் பறவைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை ஏற்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் முருகன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story