இருதரப்பினர் தகராறு; 3 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் தகராறு; 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே இருதரப்பினர் தகராறு காரணமாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை டவுணை அடுத்த கோடீஸ்வரன் நகர் 16-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதக்கத்அப்துல்லா மகன் அப்துல் காதர் (வயது 34). இவரது உறவினரான அதே பகுதி 13-வது தெருவை சேர்ந்தவர் முகமது ரசூல் மகன் சபீர் அகமது (33). அப்துல் காதர் மனைவியை சபீர் அகமது தவறாக பேசியதாகவும், இதேபோல் சபீர் அகம்மது மனைவியிடம் அப்துல்காதர் தவறான எண்ணத்தில் பேசியது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றவே ஒருவரை ஒருவர் கம்பால் தாக்கியதில் அப்துல் காதர் மற்றும் சபீர் அகமது காயமடைந்தனர். காயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்துல் காதர் புகாரின் பேரில் சபீர் அகமது மீதும், இதேபோல் சபீர் அகமது புகாரின் பேரில் அப்துல் காதர் மற்றும் அவரது உறவினரான முகமது அப்துல் ரகுமான் மீதும் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story