இருதரப்பினர் தகராறு; 10 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் தகராறு; 10 பேர் மீது வழக்கு
x

இருதரப்பினர் தகராறு தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த கூந்தன்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் மாயகிருஷ்ணன் (வயது 21). அதே ஊரைச்சேர்ந்தவர் அய்யாத்துரை மகன் ஜெயச்சந்திரன் (48). இருவரது வயலும் அருகருகே உள்ளது. சம்பவத்தன்று ஜெயச்சந்திரன் தனது வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரது ஆடு ஒன்று மாயகிருஷ்ணன் வயலில் சென்று மேய்ந்ததாகவும், அதை அவர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.

ஜெயச்சந்திரன் அவரது மகன்கள் சுடலைமணி (22) இசக்கிதுரை (20), தாயார் லட்சுமி (70) உள்பட 7 பேர் சேர்ந்து மாயகிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு மாயகிருஷ்ணன் அவரது உறவினர்கள் செண்பகவடிவு (21), கோகிலா ஆகியோர் சேர்ந்து ஜெயச்சந்திரன் மகன் சுடலைமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாயகிருஷ்ணன், சுடலைமணி ஆகியோர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story