தனியார் பள்ளியில் இருதரப்பினர் மோதல்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


தனியார் பள்ளியில் இருதரப்பினர் மோதல்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x

புதிய தாளாளர் நியமன விவகாரத்தில் தனியார் பள்ளியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி

புதிய தாளாளர் நியமன விவகாரத்தில் தனியார் பள்ளியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

புதிய தாளாளர் நியமனம்

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல கட்டுப்பாட்டின் கீழ் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக ஞானதிரவியம் எம்.பி. செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய தாளாளராக வக்கீல் அருள்மாணிக்கம் என்பவரை பிஷப் பர்னபாஸ் நியமித்து உள்ளார்.

நேற்று அருள் மாணிக்கம் பள்ளிக்கு வந்து தாளாளராக பொறுப்பு ஏற்றார். இதை அறிந்த ஞானதிரவியம் எம்.பி. தனது ஆதரவாளர்களுடன் நேற்று பிற்பகல் பள்ளிக்கூடத்துக்கு வந்தார்.

கைகலப்பு

அப்போது அங்கு இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் திடீரென்று மோதல் ஏற்பட்டு கைகலப்பும் நடந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் வாசிவம் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பரபரப்பு

இந்த சம்பவத்தையொட்டி அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் பள்ளிக்கூட வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.


Next Story