இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்குப்பதிவு


இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்குப்பதிவு
x

களக்காடு அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் மகன் ஜெபராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளியான இவர் தனது அண்ணன் கோயில்ராஜிக்கு புதியதாக லோடு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இவருக்கும், அதே ஊரில் ஏற்கனவே லோடு ஆட்டோ வைத்துள்ள துரைராஜ் மகன் சம்பத்ராஜாவிற்கும் (32) தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெபராஜ் தனது வீட்டு பின்புறமுள்ள தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சம்பத்ராஜா, சேகர் மகன் டாலி, சவுந்தரராஜன் மகன் ஸ்டீபன் உள்பட 4 பேர் சேர்ந்து ஜெபராஜை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபோல ஜெபராஜ், ஜெயசீலன், கோயில்ராஜ் ஆகியோர் சேர்ந்து சம்பத்ராஜாவை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி இருதரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள், இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story