இரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு
தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே விருகாவூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பொன்முடி மகன் ராதாகிருஷ்ணன்(38) என்பவருக்கும் இரவு நேரங்களில் வீட்டின் மீது கல், மண் வீசியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்றும் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னா் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் ஆதிமூலம் கொடுத்த புகாரின் பேரில் பொன்முடி மகன் அரிகிருஷ்ணன், இளவரசன் மகன்கள் கலிவரதன், மதுரமுத்து ஆகிய 3 பேர் மீதும், இதேபோல் ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அய்யாசாமி மகன்கள் ஆதிமூலம், ராஜி மற்றும் ராஜி மனைவி சிவகாமி, இவரது மகன் தனுஷ், ஆதிமூலம் மகன் மணிகண்டன் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.