ரூ.8½ லட்சத்தில் திட்டப்பணிக்கு பூமி பூஜை


ரூ.8½ லட்சத்தில் திட்டப்பணிக்கு பூமி பூஜை
x

காட்டுசீகலஅள்ளி பகுதியில் ரூ.8½ லட்சத்தில் திட்டப்பணிக்கு பூமி பூஜை நடந்தது.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு காட்டுசீகலஅள்ளி பகுதியில் ராமர் கோவில் அருகே ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் மினி டேங்க் அமைத்தல், ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பிடம் புதுப்பித்தல், ரூ.2.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதுப்பித்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் மனோகரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சீனிவாசன், தர்மகர்த்தா சீனிவாசன், கவுன்சிலர்கள் சிவகுமார், மாதப்பன், கீதா, சுரேந்திரன், சக்தி, பிரியா, ராமன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story