பர்கூர் ஒன்றியத்தில்ரூ.32 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை


பர்கூர் ஒன்றியத்தில்ரூ.32 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை
x
கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னமட்டாரப்பள்ளிமற்றும் குருவிநாயனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பன்னோக்கு கட்டிடம், பயணியர் நிழற்கூடம் ஆகியவை கட்ட பூமி பூஜை நடந்தது. இதில் தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், கட்சி நிர்வாகிகள் வெங்கடேசன், விசுவநாதன், ரங்கநாதன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story