பவானியில் 24.6 மி.மீட்டர் மழைப்பதிவுசேறும், சகதியுமாக மாறிய ஈரோடு மார்க்கெட்


பவானியில் 24.6 மி.மீட்டர் மழைப்பதிவுசேறும், சகதியுமாக மாறிய ஈரோடு மார்க்கெட்
x

பவானியில் 24.6 மி.மீட்டர் மழைப்பதிவானது. சேறும், சகதியுமாக ஈரோடு மார்க்கெட் மாறியது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகரில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஈரோடு ஈ.வி.என்.ரோடு, காந்திஜிரோட்டில் ஆங்காங்கே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக ரோட்டில் வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மழையால் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் வியாபாரிகளும், காய்கறி வாங்க வந்த மக்களும் அவதி அடைந்தனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பவானி - 24.6

கோபிசெட்டிபாளையம் - 23.2

ஈரோடு - 20

வரட்டுப்பள்ளம் அணை - 18.8

எலந்தகுட்டைமேடு - 18.2

கொடிவேரி அணை - 18

அம்மாபேட்டை - 18

சத்தியமங்கலம் - 15

நம்பியூர் - 13

கவுந்தப்பாடி - 10

குண்டேரிப்பள்ளம் அணை - 3.2


Related Tags :
Next Story