நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பவானிசாகர்
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால்கள் வழியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 1,328 கன அடி தண்ணீர் வந்தது.
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,872 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 88.17 அடியாக இருந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 800 கன அடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.