பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89 அடிக்கு கீழ் சரிந்தது


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89 அடிக்கு கீழ் சரிந்தது
x

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89 அடிக்கு கீழ் சரிந்தது

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89 அடிக்கு கீழ் சரிந்தது

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்றால் அது மிகையாகாது.

இப்படி முக்கியத்துவம் பெற்ற பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் உபரி தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர்மட்டம் குறைந்தது

இதையடுத்து அணையில் இருந்து பாசனத்துக்காக அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. அதேபோல் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததாலும் அணையின் நீர்மட்டம் சரிந்து கொண்டே வருகிறது.

நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,156 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் வினாடிக்கு 800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



Next Story