பாரதியார் மன்ற விழா


பாரதியார் மன்ற விழா
x

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் பாரதியார் மன்ற விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியார் மன்ற ஆண்டு விழா அங்குள்ள அம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மனுவேல் செல்வநாயகம் தலைமை தாங்கினார். ஒன்றிய பாரதியார் மன்ற தலைவர் அப்பாதுரை, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பால்துரை, கூட்டுறவு வங்கி இயக்குனர் விவேகானந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ ஆலோசகர் அருள்செல்வன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழு முதல் நிலை நீதிபதி ஆர்.எஸ்.கே.துரை, தி.மு.க. பேச்சாளர் சந்திரசேகர், பாரதி முத்துநாயகம் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மதியழகன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் கீழப்பாவூர் நகர காங்கிரஸ் தலைவர் குமரேசன், சுரண்டை நகர காங்கிரஸ் சகோதரி சண்முகசுந்தரம், ஆசிரியர் சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாரதியார் மன்ற செயற்குழு உறுப்பினர் பொன்ராஜகோபால் நன்றி கூறினார்.


Next Story