பாரதியார் நினைவு நாள்


பாரதியார் நினைவு நாள்
x

எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் இளந்தாமரை கலை இலக்கிய அமைப்பின் சார்பில், பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியார் இல்லம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். விசிறி சங்கர், பள்ளி மாணவி அஞ்சனா சிங்காரவேலன் ஆகியோர் பாரதி குறித்து பேசினர். தொடர்ந்து பாரதி பாடல்களுக்கு பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும், தேவராட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவில் ஆத்திராஜ், சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story