கோவில்பட்டியில் பகத்சிங் பிறந்தநாள் விழா
கோவில்பட்டியில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங்கின் 116-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். பகத்சிங் ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், நிர்வாகிகள் சம்பத்குமார், கருப்பசாமி, கலைச்செல்வன், ரோட்டரி துணை ஆளுநர் முத்து செல்வம், நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, கோவில்பட்டி ஏ. கே. எஸ். தியேட்டர் ரோடு, ஜீவா இல்லத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 116-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் தாலுகா செயலாளர் மணி, நகர தலைவர் ரஞ்சனி கண்ணம்மா, இந்திய கம்யூனிஸ்டு நகரச் செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் ஜி. பாபு, மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.